ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள அல்ச்சி கிராமத்தில் இருந்து வடக்கே 186 கிலோமீட்டர் தொலைவில் காலை 7.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளகோலில் 4.3 எனப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த இதுவரை தகவல் எதுவும் இல்லை.